search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது கடத்தல்"

    • கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர்.
    • புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கீழத்தெருவை சேர்ந்த கோபால் (வயது 47) மற்றும் அவரது மகன் முத்துபிரகாஷ் என்ற படையப்பா (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் மதுபான போலி லேபில்களை ஒட்டி மிலிட்டரி மது என விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கார் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு தூசி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 228 மது பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில் சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அன்பழகன் ஆகியோர் என தெரிந்தது.

    போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • விசாரணையில் அவர் ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணி மேற்கொண்டனர். ஜி.என்.செட்டி தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த முத்து (வயது 34) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர்.
    • கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து மது கடத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒழுக்கீனமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் மது போதையில் ஓட்டுகிறார்களா என சோதனை செய்து மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர். இதனையடுத்து கடலூரில் மதுபோதையில் ஏ.டியம் எந்திரத்தை வாலிபர் ஒருவர் இரவில் உடைத்த சம்பவமும் நடைபெற்றது. புதுவை மாநிலத்திலிருந்து மது அருந்தி வருவதும், மது கடத்தல் சம்பவமும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே உள்ள சோதனை சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு சென்று அங்கு திடீரென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் அங்கு பணியில் இருந்த போலீசார்கள் சரியான முறையில் சோதனை செய்கின்றார்களா அல்லது சரியான முறையில் அவர்கள் பணிகளை செய்யாமல் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீசார்களிடம் மது கடத்தல், மது போதையில் வாகனங்களை ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக விபத்து ஏற்படும் விதத்தில் லோடுகளை ஏற்றி வருவது, ஒழுங்கீனமான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலி பர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்க ளை யாரேனும் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 230 பாக்கெட்டுகள் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூடவுன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதி வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந் தது தெரிய வந்தது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (வயது 20), குமரன் (24), மைக்கேல் (20), கதிர்வேல் (20) என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக் களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து 230 மது பாக் கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்ப திவுசெய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சாராயம் தயாரித்து வைத்திருந்ததை அழித்தும் அவர்கள் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பகலவன் உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 33 ஆண்கள், 30 பெண்கள் என 63 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 831 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டள்ளது.

    • கள்ளக்குறிச்சி அருகே புதுவை மாநில மது கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மலைக் கோட்டை பகுதியில் வெளி மாநில மதுபாட்டில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற னர். அப்போது காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் சங்கரா புரம் அருகே ராவத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (எ) நவீன் (வயது 27), கள்ளக்குறிச்சி கரியப்பாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35), மற்றும் நாமக்கல் பாப்பான் காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து காட்டுகொட்டகை பகுதியில் மறைத்து வைத்து தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2852 மது பாட்டில்கள் மற்றும் 3 கேன்களில் இருந்த 105 லிட்டர் விஷசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் போலீசார் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இடுக்கி நாய் படையை சேர்ந்த புரூஸ் மற்றும் லைக்கா ஆகிய நாய்கள் உதவியுடன் மது மற்றும் போதைபொருள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஓணம் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பண்டிகையின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மது மற்றும் போதை பொருள் கடத்தி வந்தனர்.

    போலீசார் சோதனையில் அவை பிடிபட்டது. அதனைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் போலீசார் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குமுளி சோதனைச்சாவடியில் இடுக்கி கலால்டிவிசன் போலீசார் மோப்பநாய் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி நாய் படையை சேர்ந்த புரூஸ் மற்றும் லைக்கா ஆகிய நாய்கள் உதவியுடன் மது மற்றும் போதைபொருள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    புலனாய்வுத்துறை இணை கலால் ஆணையர் ரஞ்சித், இடுக்கி கலால் துணை ஆணையர் சலீம் ஆகியோர் உத்தரவுப்படி வண்டிபெரியாறு கலால் ஆய்வாளர் ராஜேஸ், குமுளி சோதனைச்சாவடி கலால் ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தபின்னர் தமிழக பகுதியிலிருந்து கேரளாவுக்குள் அனுமதிக்கின்றனர்.

    • போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 768 மது பாட்டில்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக வேலூர் மத்திய சிறப்பு தனிப்பட்ட பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் மத்திய சிறப்பு தனி படை பிரிவினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அப்போது ஜோலார்பேட்டை போலீசார் மக்கானூர் பகுதியில் தனிப்படை போலீசாருடன் சேர்ந்து காரை மடக்கி பிடித்துததத கசாதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில 768 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் மது பாட்டில் கடத்தியவர்கள் திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி சேர்ந்த செல்வக்குமார் (வயது 26), பெரியகரம் பகுதி அன்னை சத்யா நகரை சேர்ந்த கமலேசன் (வயது 42) என்பதும் இவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 768 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து இருவரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×